இந்தியா
கொரோனா வைரஸ்

இந்தியாவில் புதிதாக 1,086 பேருக்கு கொரோனா- தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு

Published On 2022-04-06 04:29 GMT   |   Update On 2022-04-06 04:29 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 567 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 2 நாட்களாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்தபாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரத்து 925 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் மேலும் 71 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட 66 மரணங்கள் அடங்கும். நாட்டில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,21,487 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,198 பேர் அதன்பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 567 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,871 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 183 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 15,49,699 டோஸ்களும், இதுவரை 185 கோடியே 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி 79.20 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,81,374 மாதிரிகள் அடங்கும்.


Tags:    

Similar News