இந்தியா
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

37 சதவீதத்துக்கு அதிகமான குழந்தைகள் தூங்கும்முன் செல்போன் பயன்படுத்துகின்றனர் - மத்திய மந்திரி தகவல்

Published On 2022-03-16 23:56 GMT   |   Update On 2022-03-16 23:56 GMT
படுக்கையில் 23 சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
புதுடெல்லி:

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்குழந்தைகள் அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்தத் தொடங்கினர்.

இதற்கிடையே, குழந்தைகளிடம் செல்போன் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு எதுவும் நடத்தியுள்ளதா? என மாநிலங்களவையில் வைகோ எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மத்திய குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதா என்பது தொடர்பான தரவுகள் எதுவும் இல்லை. அதேசமயம் தூங்குவதற்கு முன் 37.15 சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகவும், படுக்கையில் 23.30 சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டார். 

Tags:    

Similar News