இந்தியா
பிரியங்கா காந்தி வதோரா

பாஜக-வுக்கு அடிப்பணியாததால் லாலு துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்- பிரியங்கா காந்தி

Update: 2022-02-18 10:27 GMT
லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா டுவிட்டரில் குரல் கொடுத்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல், டோராண்டா கருவூல மோசடி வழக்கிலும் லாலுவை குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறை தண்டனையில் இருக்கும் லாலு உடல்நலப் பிரச்சனை காரணமாக தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார்.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா டுவிட்டரில் குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பாஜகவின் முன் தலைவணங்காதவர்கள் துன்புறுத்தலை சந்திக்க நேரிடும். அப்படி தான் லாலுவும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். இது பாஜக முத்திரை அரசியலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.

லாலு பிரசாத் யாதவ் அரசியலில் சமரசமற்ற வழிகளில் செல்வதால் அவர் தாக்கப்படுகிறார். லாலுவுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்புகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. நான் உலகின் இனிமையான தீவிரவாதி: அரவிந்த் கெஜ்ரிவால்
Tags:    

Similar News