செய்திகள்

செல்பி எடுத்தபோது கடலில் மூழ்கி பெண் டாக்டர் பலி

Published On 2019-05-18 04:04 GMT   |   Update On 2019-05-18 04:04 GMT
மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
பனாஜி:

கோவா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா நேற்று முன் தினம் மாலை பனாஜி கடற்கரைக்கு சென்றார். கடலை பின்னணியாக கொண்டு அவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்க போராடினர். சற்று நேரத்தில் ரம்யா கிருஷ்ணா கடலுக்குள் மூழ்கினார். அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் தேடி வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Tags:    

Similar News