செய்திகள்

வாரணாசியில் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் ஆலோசனை

Published On 2019-04-26 04:33 GMT   |   Update On 2019-04-26 06:25 GMT
வாரணாசி தொகுதியில் இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதையடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வுடன், ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். #NDALeaders #AmitShah
வாரணாசி:

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதனையொட்டி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று வாரணாசியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தினார்.

இந்த ரோட்ஷோவில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக  கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வழிநெடுக மலர் தூவி, பிரதமர் மோடியை வரவேற்றனர். இதையடுத்து இன்று பிரதமர் மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



இந்நிலையில் இன்று காலை வாரணாசியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் வேலுமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர். #NDALeaders #AmitShah
 
 
Tags:    

Similar News