செய்திகள்

ஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த திட்டம் - காங்கிரஸ் சொல்கிறது

Published On 2019-04-24 01:26 GMT   |   Update On 2019-04-24 01:26 GMT
ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதி மாலை முதல் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருவதாக ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கச்சா எண்ணெய் விலை, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

எல்லாவற்றுக்கும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயத்தில், மே 23-ந் தேதி மாலையில், லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala 
Tags:    

Similar News