செய்திகள்

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்- வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்சுக்கு நோட்டீஸ்

Published On 2019-04-23 06:54 GMT   |   Update On 2019-04-23 06:54 GMT
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்சுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #CJIRanjanGogoi #AllegationsAgainstCJI
புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது நீதித்துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோகிண்டன் நரிமன், தீப்க் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் நேரில் ஆஜராகும்படி நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

பாலியல் வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சிக்கவைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் கூறியிருந்தார். தலைமை நீதிபதி மீது ஒரு பெண் மூலம் பாலியல் புகார் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்காக 1.5 கோடி ரூபாய் தருவதாகவும் தன்னிடம் ஒருவர் கூறியதாக கூறியிருந்தார். ஆனால், அவர்கள் சொன்னதில்  உண்மை இருப்பது போல் தெரியாததால், அவர்களை உடனே வெளியே போகச்சொன்னதாகவும் கூறினார். மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார்.



எனவே, வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் நாளை நேரில் ஆஜராகி, இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #CJIRanjanGogoi #AllegationsAgainstCJI
Tags:    

Similar News