செய்திகள்

நான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது- பிரதமர் மோடி

Published On 2019-04-22 10:11 GMT   |   Update On 2019-04-22 10:11 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PMModi
நந்தர்பார்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நந்தர்பார் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நான் ஆட்சிக்கு மீண்டும் வந்தபின், இட ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து விடுவேன் என எதிர்கட்சியினர் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால்,  மோடியாகிய நான் இங்கு இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க இயலாது. இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் நேராது. டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கார் எங்களுக்கு கொடுத்த இந்த இட ஒதுக்கீட்டை யாராலும் தொட இயலாது.

வடக்கு மகாராஷ்டிராவில் எத்தனால் தயாரிப்பிற்காக கரும்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர இயலும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதனை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள்.

மாற்றாக எரிபொருள்  இறக்குமதி செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் பெற முயல்கின்றனர். எத்தனால் இறக்குமதி செய்தால் எரிபொருளால் கிடைக்கும் வருமானத்தை இழக்க நேரிடும் என்பதனால் இவ்வாறு செய்ய மறுக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi 
Tags:    

Similar News