செய்திகள்

வாரிசு அரசியலால் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி- வாக்களித்த பின் குமாரசாமி பேட்டி

Published On 2019-04-18 07:20 GMT   |   Update On 2019-04-18 07:20 GMT
கர்நாடக மாநிலத்தில் இன்று தனது வாக்கை பதிவு செய்த முதல்வர் குமாரசாமி, வாரிசு அரசியலால் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy
பெங்களூர்:

பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகம், புதுவை, கர்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

அவ்வகையில், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி ராமநகரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி அனிதா குமாரசாமி, அவரது மகனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளருமான நிகில் ஆகியோரும் வாக்களித்தனர்.



வாக்களித்த பின்னர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாரிசு அரசியல் இப்போது முக்கிய பிரச்சனை அல்ல. நாட்டின் பிரச்சனைகள்தான் பிரதானம். வாரிசு அரசியல் மற்றும் பிராந்திய அரசியலால் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாஜகவின் விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை” என்றார்.

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா ஹசன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, படுவலகிப்பி கிராமத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாக்களித்தார். #LokSabhaElections2019 #Kumaraswamy 
Tags:    

Similar News