செய்திகள்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - டுவிட்டர் நிறுவனம் அதிரடி

Published On 2019-04-17 21:53 GMT   |   Update On 2019-04-17 21:53 GMT
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague
புதுடெல்லி:

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் கடந்த 5-ந்தேதி வெளியிட்டு இருந்தார். மேலும் மாநிலம் முழுவதும் பிரசாரத்தின் போதும் இந்த கருத்தை அவர் தெரிவித்து வந்தார்.

இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், ஆதித்யநாத்தின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரியை பதிவை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியது. இதை ஏற்றுக்கொண்ட டுவிட்டர் நிறுவனம், ஆதித்யநாத்தின் பதிவை நேற்று நீக்கியது.

முன்னதாக தனது பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்த யோகி ஆதித்யநாத்துக்கு 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague 
Tags:    

Similar News