செய்திகள்

மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை

Published On 2019-04-16 03:07 GMT   |   Update On 2019-04-16 03:07 GMT
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #LokSabhaElections2019 #ManekaGandhi
புதுடெல்லி:

சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.

ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார். #LokSabhaElections2019  #ManekaGandhi
Tags:    

Similar News