செய்திகள்

மோடி தரகராக செயல்பட்டது தெளிவாகி விட்டது - ரிலையன்ஸ் வரி தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கருத்து

Published On 2019-04-14 02:58 IST   |   Update On 2019-04-14 02:58:00 IST
ரபேல் பேரத்தில் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகி விட்டது என காங். தலைமைச்செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். #RafaleDeal #Reliance #Modi #Congress
புதுடெல்லி:

ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அனில் அம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு வரி தள்ளுபடி வழங்கியதாக பத்திரிகை தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் தலைமைச்செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “இந்த பேரத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டிருக்கிறார் என்பது இப்போது தெளிவாகி விட்டது” என கூறினார்.

மேலும் அவர், “இதே போன்று எத்தனை பிற நிறுவனங்கள் வரி தள்ளுபடி பெற்றன?” என கேள்வி எழுப்பியதுடன், “ காவலாளி திருடனாகி விட்டார் என்பது இதன்மூலம் தெளிவாகி இருக்கிறது. மோடியின் ஆசி உள்ளவர்கள் எதையும் அடைய முடியும்” என்றும் குறிப்பிட்டார்.  #RafaleDeal #Reliance #Modi #Congress
Tags:    

Similar News