செய்திகள்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த நல்ல திட்டங்களை மோடி அழித்து விட்டார் - ராகுல் குற்றச்சாட்டு

Published On 2019-03-31 07:46 GMT   |   Update On 2019-03-31 07:46 GMT
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த 100 நாள் வேலை உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #LSpolls #Congress #RahulGandhi
ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் ஒன்றும் செய்யவில்லை. தனது வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இங்குள்ள கட்சிகள் பிரதமர் மோடியிடம் சென்று வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என கேள்வி கேட்காதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

பாராளுமன்ற தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அழித்து விட்டார்.

நாங்கள் கொண்டு வந்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் வறுமையை ஒழிப்பதற்கான அமைதியான ஆயுதமாகும் என தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #RahulGandhi
Tags:    

Similar News