செய்திகள்
மோடியை எதிர்த்து போட்டியிட தயங்க மாட்டேன்: பிரியங்கா சூசக தகவல்
பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் தனக்கு தயக்கம் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #PMModi
ரேபரேலி :
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கடந்த புதன்கிழமை, ‘‘கட்சி விரும்பினால் நான் தேர்தலில் போட்டியிட தயார்’’ என்று கூறினார். இதனால் அவர் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவார் என்ற கருத்து நிலவியது.
இந்நிலையில் நேற்று தனது தாயார் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் தனக்கு தயக்கம் இல்லை என்பதை சூசகமாக தெரிவித்தார்.
பிரியங்காவிடம் கட்சி தொண்டர் ஒருவர், ரேபரேலி தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று கூறினார். அதற்கு பிரியங்கா, அப்படியென்றால் நான் வாரணாசி தொகுதியில் போட்டியிடவில்லையா? என்று நகைச்சுவையாக கேட்டார். #PriyankaGandhi #PMModi