செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் பலி

Published On 2019-03-24 14:21 IST   |   Update On 2019-03-24 14:21:00 IST
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். #JammuKashmir #PakistanCeasefire
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது.  

இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. நள்ளிரவு வரை இந்த சண்டை தொடர்ந்தது. பாகிஸ்தான் படைகள் சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கிகளை கொண்டு இந்திய முகாம்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டை இன்று அதிகாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர்  படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை உடனே ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரி வகார் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #JammuKashmir #PakistanCeasefire
Tags:    

Similar News