செய்திகள்

ஊழல்களின் மாஸ்டர் பிரதமர் மோடி - மம்தா கடும் தாக்கு

Published On 2019-02-08 13:51 GMT   |   Update On 2019-02-08 13:51 GMT
மேற்கு வங்காளத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஊழல்களின் மாஸ்டராக பிரதமர் மோடி விளங்குகிறார் என கடுமையாக தாக்கிப் பேசினார். #MamatBanerjee #PMModi
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. மாநாடு முடிந்ததும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு இந்தியாவை பற்றி தெரியாது. அவர் கோத்ரா மற்றும் பிற மோதல்களில் இருந்து வந்தவர். தேர்தலுக்கு முன்னால் அவரை சாய்வாலா என அழைத்தோம். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர் ரபேல் வாலா என அழைக்கப்பட உள்ளார்.



நாட்டின் மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் இருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ரபேலின் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாஸ்டர். பிரதமர் மோடி ஊழல்களின் மாஸ்டராக விளங்குகிறார்.

பணத்தின் பலத்தால் மோடி பிரதமர் ஆனது மிகவும் துரதிஷ்டவசமானது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக பணியாற்றுவதால் பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆனால், எனக்கு பயம் கிடையாது. நான் என்னுடைய பாதையில் போராடுகிறேன். எங்களது கொள்கைக்கு நான் எப்போதும் மதிப்பளிக்கிறேன். 

நாங்கள் பிரதமர் நாற்காலியை தான் மரியாதை அளிக்கிறோம். அவருக்கு அல்ல என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #MamatBanerjee #PMModi
Tags:    

Similar News