செய்திகள்

டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்கும்படி உத்தரவிட முடியாது- உச்ச நீதிமன்றம்

Published On 2019-02-07 06:34 GMT   |   Update On 2019-02-07 08:26 GMT
டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #TTVDhinakaran #AMMK #CookerSymbol
புதுடெல்லி:

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது, பதில் அளித்த தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தர சின்னமாக ஒதுக்க முடியாது என கூறியது. எனவே, குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.


இதையடுத்து டிடிவி தினகரன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது. குக்கர் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும் இரட்டை இலை தொடர்பான வழக்கை 4 வாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. #TTVDhinakaran #AMMK #CookerSymbol
Tags:    

Similar News