செய்திகள்

கூட்டணி அரசை கவிழ்க்க மோடி விரும்ப மாட்டார்: தேவேகவுடா

Published On 2019-02-05 02:01 GMT   |   Update On 2019-02-05 02:01 GMT
கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என்று தேவேகவுடா கூறியுள்ளார். #Devegowda
பெங்களூரு :

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி நடந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி அரசை அகற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என்று தேவேகவுடா கூறி இருக்கிறார். இது காங்கிரசார் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார். கர்நாடக பா.ஜனதா தலைவர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வழி நடத்துகிறாரா? என்று எனக்கு தெரியாது. பா.ஜனதா தேசிய கட்சி. கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்தால், அதற்கு அக்கட்சியின் மேலிடத்தின் அனுமதி தேவை. கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா 3 நாட்கள் மட்டுமே முதல்-மந்திரியாக இருந்தார். அதனால் இயற்கையாகவே அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.  #Devegowda

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Tags:    

Similar News