செய்திகள்

கொல்கத்தாவில் சி.பி.ஐ. அதிகாரிகள் செய்தது சரியா? - முன்னாள் இணை இயக்குனர் கருத்து

Published On 2019-02-04 13:02 GMT   |   Update On 2019-02-04 13:02 GMT
கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முயன்றது தொடர்பாக சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குனர் ஷாந்தனு சென் கருத்து தெரிவித்துள்ளார். #WBgovt #CBIstandoff #CBIExJointDirector
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் போலீஸ் கமிஷனரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யச் சென்ற விவகாரம் தொடர்பான அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில அரசு மற்றும் சி.பி.ஐ. முகமைக்கு இடையில் தொடங்கியுள்ள இந்த பணிப்போர் பற்றி சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குனர் ஷாந்தனு சென் கருத்து தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ. முகமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அரசியல்வாதிகள் விரும்பலாம். ஆனால், அதற்கு அதிகாரிகள் இடமளித்து விடக் கூடாது. 

தற்போது, மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருவதுபோன்ற விவகாரங்களுக்கான ஒரே தீர்வு என்னவென்றால், இதுதொடர்பாக சி.பி.ஐ, சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த வழக்கில் சி.பி.ஐ, சிறப்பு நீதிமன்றத்தை அதிகாரிகள் ஏன் அணுகவில்லை? என்பது எனக்கு புரியவில்லை என ஷாந்தனு சென் குறிப்பிட்டுள்ளார். #WBgovt #CBIstandoff  #CBIExJointDirector
Tags:    

Similar News