செய்திகள்

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு - பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பும் மணிப்பூர் டைரக்டர்

Published On 2019-02-04 05:11 GMT   |   Update On 2019-02-04 06:16 GMT
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். #PadmaShri #AribamSyamSharma
இம்பால்:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் அரிபம் ஷியாம் சர்மா (83). இவர் பிரபல மணிப்பூர் சினிமா டைரக்டராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.



இவர் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்ப உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்தது. அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு டைரக்டர் அரிபம் ஷியாம் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அண்டை நாடுகளான வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதிவரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு அதிவிரைவாக குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது.

இதற்கு மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த விருதை திரும்ப அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

டைரக்டர் சர்மா பல தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார். அவருக்கு மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #PadmaShri #AribamSyamSharma

Tags:    

Similar News