செய்திகள்

சமூக வலைதளங்களில் வெளியான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் வெறும் வதந்தி - தேர்தல் ஆணையம்

Published On 2019-01-17 13:47 GMT   |   Update On 2019-01-17 16:38 GMT
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் வெறும் வதந்தி என தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. #ParlimentElection #ECI
புதுடெல்லி:

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதற்கிடையே, 2019-ம் ஆண்டுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுதொடர்பான புகார் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் வெறும் வதந்தி என தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் வெறும் வதந்தி.

இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்து விசாரிக்கக் கோரி டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #ParlimentElection #ECI
Tags:    

Similar News