செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ராஜஸ்தானில் இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி

Published On 2019-01-09 06:40 GMT   |   Update On 2019-01-09 07:06 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்குகிறார். #Congress #RahulGandhi
ஜெய்ப்பூர்:

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் முன் ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டன.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்குகிறார். அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பதவி ஏற்ற 2 நாளிலேயே விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று ராகுல்காந்தி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

அதன்படி காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட் பதவி ஏற்ற உடனேயே விவசாய கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தலைநகரம் ஜெய்ப்பூரில் இன்று பிரமாண்ட விவசாயிகள் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார். இந்த பேரணியில் பங்கேற்பதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குவதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராஜஸ்தான் மேலிட பொறுப்பாளருமான அவினேஷ்பாண்டே தெரிவித்தார்.


மாநில தலைவரும், துணை முதல்-மந்திரியுமான சச்சின் பைலட் கூறும்போது, நரேந்திர மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கடந்த 4½ ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி விட்டது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்தோம். அதன்படி ஆட்சிக்கு வந்ததுமே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோம்.

இன்றைய கூட்டத்தில் ராகுல்காந்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். இது நாடு முழுவதும் எதிரொலிக்கும் வகையில் இருக்கும் என்று கூறினார். #Congress #RahulGandhi
Tags:    

Similar News