செய்திகள்

பொது கழிப்பறை அடிப்படை உரிமை - பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Published On 2019-01-07 14:39 GMT   |   Update On 2019-01-07 14:39 GMT
சுத்தமான பொது கழிப்பறை மனிதர்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SupremeCourt #PIL
புதுடெல்லி:

பல்வேறு வேலைகள் காரணமாக நாட்டின் முக்கியமான நகரங்களுக்கு வரும் பலர், சுத்தமின்மை காரணமாக பொது கழிப்பறைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், வழக்கறிஞர் அன்ஷுல் சவுத்ரி என்பவர், பொது கழிப்பறை அடிப்படை உரிமை எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தொடர்ந்தார். அந்த மனுவில், சுத்தமான பொது கழிப்பறை மனிதர்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். 

இதை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரரை கண்டித்ததுடன், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற பொதுநல வழக்குகளை போடவேண்டாம் எனவும் மனுதாரர்ருக்கு அறிவுறுத்தியது. #SupremeCourt #PIL
Tags:    

Similar News