செய்திகள்

பொய் பேசிய பாவங்களை கங்கையில் வந்து கழுவுங்கள் - ராகுலுக்கு உ.பி. மந்திரி அழைப்பு

Published On 2019-01-04 18:35 IST   |   Update On 2019-01-04 18:35:00 IST
ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய்களையே பேசிவரும் ராகுல் காந்தி கும்பமேளாவுக்கு வந்து கங்கை ஆற்றில் தனது பாவங்களை கழுவ வேண்டும் என உ.பி. மந்திரி குறிப்பிட்டுள்ளார். #UPminister #Rahul #washoffsin #lyingoverRafale
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங் இன்று வாரணாசி நகரில் பிரதமரின் ஆரோக்கிய காப்பீடு திட்டம் தொடர்பான அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்தார்த்நாத் சிங், ‘ரபேல் விவகாரத்தில் கடந்த இரண்டாண்டுகளாக ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருகிறார். தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

பிரயாக்ராஜ் (முந்தைய அலகாபாத்) நகரில் விரைவில் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவுக்கு ராகுல் காந்தி வர வேண்டும். இங்குள்ள கங்கை ஆற்றில் நீராடி அவர் பேசிய பொய்கள் தொடர்பான பாவங்களை கழுவிக்கொள்ள வேண்டும் என அவரை நான் அழைக்கிறேன். கங்கைத்தாய் அவரது பாவங்களை மன்னிப்பாராக!’ என குறிப்பிட்டார். #UPminister #Rahul #washoffsin #lyingoverRafale
Tags:    

Similar News