- ‘டார்ச்லைட்' படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
- புகைப்பட கலைஞராக மாறி, வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார்.
'ஜெயம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சதா, அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து கவனம் ஈர்த்தார். தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்தார்.
பின்னர் திடீரென படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இதையடுத்து 'டார்ச்லைட்' படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது முழுவதுமாகவே சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்ட சதா, புகைப்பட கலைஞராக மாறி, வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு லேசாக கவர்ச்சி காட்டும் தனது படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய கதைகளும் கேட்டு வருவதாக தகவல்.
41 வயதாகும் சதா மீண்டும் சினிமாவுக்கு வந்து சாதிப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.