செய்திகள்

மேகதாது விவகாரத்தை மறைக்க கேம் பிக்சிங்: பாஜக, காங்கிரஸ் மீது தம்பிதுரை சாடல்

Published On 2019-01-03 09:53 GMT   |   Update On 2019-01-03 09:53 GMT
மேகதாது விவகாரத்தை மறைக்கும் விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் இணக்கமாக இருப்பதாக தம்பிதுரை குற்றம்சாட்டினார். #MakedatuIssue #Thambidurai
புதுடெல்லி:

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக மக்களவையில் தொடர்ந்து குரல் எழுப்பிய அதிமுக எம்பிக்கள் 31 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் போராடினார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.



தமிழகத்தின் உரிமை காக்கப்படவேண்டுமானால், மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. மேகதாது அணைத் திட்ட ஆய்வுப் பணிக்கு மத்திய நீர்வள ஆணையம் தந்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும்.

இதற்காக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய எம்பிக்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இத்தகைய செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. அவைக்கு வராவிட்டால்கூட பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்

காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பாராளுமன்றத்தில் இணக்கம் உள்ளது. இதைத் தான் கேம் பிக்சிங் என்பார்கள். மேகதாது விவகாரத்தை மறைக்கவே ரபேல் விவகாரத்தை காங்கிரஸ் எழுப்புகிறது. ரபேல் விவகாரத்திற்குப் பதிலளிப்பதுபோல் மேகதாது விவகாரத்தை பாஜக மறைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #MakedatuIssue #Thambidurai

Tags:    

Similar News