செய்திகள்

மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு- பாராளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-01-03 06:27 GMT   |   Update On 2019-01-03 06:27 GMT
மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் இன்று அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #WinterSession #ADMKMPsProtest
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரபேல் ஒப்பந்த விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பிரச்சினைகனை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேர் 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், எம்பிக்கள் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். #WinterSession #ADMKMPsProtest
Tags:    

Similar News