செய்திகள்

வங்காளதேசத்தில் தேர்தல் எதிரொலி - போலி செய்தி தளங்கள் மூடல்

Published On 2018-12-21 20:12 GMT   |   Update On 2018-12-21 20:12 GMT
வங்காளதேசத்தில் வரும் 30-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பக்கங்களை கொண்டு இயங்கும் பல போலி செய்தி தளங்கள் மூடப்பட்டுள்ளன. #Bangladesh #NationalElection #Facebook #FackNewsSite
டாக்கா:

வங்காளதேசத்தில் வரும் 30-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.இந்தநிலையில் அங்கு ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பக்கங்களை கொண்டு பல போலி செய்தி தளங்கள் உருவாக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளை பற்றிய தவறான தகவல்களை பரப்புவதாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து சட்டப்பூர்வமான செய்தி ஊடகங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட 9 ‘பேஸ்புக்’ பக்கங்களும், எதிர்க்கட்சிகள் பற்றிய தவறான தகவல்களை பரப்புகிற 6 போலி தனிநபர் கணக்குகளும் மூடப்பட்டுள்ளன.

இவை வங்காளதேச அரசுடன் தொடர்புடையவர்களால் உருவாக்கப்பட்டவை என்று ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் கம்ப்யூட்டர் குற்ற தடுப்பு பிரிவின் தலைவர் நத்தானியேல் கிளெய்ச்சர் தெரிவித்தார். இதே போன்று டுவிட்டரும் 15 கணக்குகளை தற்காலிகமாக மூடி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #Bangladesh #NationalElection #Facebook #FackNewsSite 
Tags:    

Similar News