செய்திகள்

அதிமுக எம்பிக்கள் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2018-12-13 06:39 GMT   |   Update On 2018-12-13 06:39 GMT
மாநிலங்களவையில் இன்று மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RSAdjourned
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு முதல் நாளில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கின.



அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அமளி நீடித்தது. இதேபோல் காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி திமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை அமைதி காக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும் அமளி நீடித்தது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RSAdjourned
Tags:    

Similar News