செய்திகள்

நிமோனியா நோயால் இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது

Published On 2018-11-21 05:19 GMT   |   Update On 2018-11-21 05:19 GMT
வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய்க்கு இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. #Pneumonia #ChildHealthWeek
புதுடெல்லி:

வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெருமளவில் தாக்குகிறது. இந்த நோய்க்கு குழந்தைகள் பலியாகின்றனர். இதுகுறித்த அறிக்கை சமீபத்தில் வெளியானது.

அதில், 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

இங்கு தினமும் 735 குழந்தைகள் இறக்கின்றன. இதன்படி இந்த நோய்க்கு இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது.



வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவை தடுக்க அதற்கான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வப்போது தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆனால் அதற்கான சரியான சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்படுவதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pneumonia #ChildHealthWeek
Tags:    

Similar News