செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி கணக்குகள் டுவிட்டரில் நீக்கம்

Published On 2018-11-14 15:48 GMT   |   Update On 2018-11-14 15:48 GMT
இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IndianElectionCommision #Twitter
புதுடெல்லி:

பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் அன்றாட நிகழ்வுகள் குறித்த தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அதில் டுவிட்டர் வலைத்தளமும் ஒன்று.

ஆனாலும், பிரபலங்களின் பெயர்களில் போலி அக்கவுண்ட் வைத்து செயல்பட்டு வருபவர்களை கண்டறிந்து டுவிட்டர் நிறுவனம் அவர்களது கணக்குகளை நீக்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் 2 போலி கணக்குகள் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த டுவிட்டர் நிறுவனம் இன்று அந்த கணக்குகளை இன்று அதிரடியாக நீக்கியுள்ளது.



இதுதொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக 2 டுவிட்டர் கணக்குகள் இயங்கி வந்தன.  @Election Comm மற்றும் @DalitFederation என்று தனித்தனியான பெயரில் இயங்கி வந்த இந்த கணக்குகளை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வந்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு என்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை. இது மக்களை தவறாக வழிநடத்த கூடும் என்பதால், டுவிட்டர் நிறுவனத்திடம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த 2 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது என தெரிவித்தனர். #IndianElectionCommision #Twitter
Tags:    

Similar News