செய்திகள்

தீபாவளி கொண்டாட மோடி கேதார்நாத் பயணம் - சிறப்பு வழிபாடு செய்கிறார்

Published On 2018-11-05 08:17 GMT   |   Update On 2018-11-05 08:17 GMT
தீபாவளி தினத்தன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்துக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளார். #Diwali #PMModi
புதுடெல்லி:

தீபாவளி தினத்தன்று ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு செல்வதை பிரதமர் மோடி வழக்கத்தில் வைத்துள்ளார்.

இந்த ஆண்டு அவர் கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்துக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளார்.

தீபாவளி தினத்தன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத்துக்கு செல்வார் என்று தெரிகிறது. கேதார்நாத் சிவாலயம் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மந்தாகினி நதிக்கரையோரத்தில் அமைந்துள்ளது.



இந்த சிவாலயம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். எனவே இங்கு சிறப்பு வழிபாடுகளை செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

கேதார்நாத் ஆலயம் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி பண்டிகை வரையே திறந்து வைக்கப்பட்டு இருக்கும். மற்ற நாட்களில் கடும் குளிர் நீடிக்கும் என்பதால் அங்கு பக்தர்கள் செல்ல மாட்டார்கள்.

கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழை-வெள்ளம் காரணமாக கேதார்நாத் ஆலயம் சேதம் அடைந்தது. பிறகு சீரமைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீட்டர் உயரத்தில் இருக்கும் கேதார்நாத் ஆலயம் பாண்டவர்கள் வழிபட்ட தலமாகும். இங்கு வழிபட்ட பிறகே மகாபாரத போரில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி இந்த தலத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகளை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Diwali #PMModi

Tags:    

Similar News