செய்திகள்

படேல் உதவியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய நிறுவனங்களை அழிப்பது தேசத்துரோகம் - ராகுல் காந்தி பாய்ச்சல்

Published On 2018-11-01 04:54 IST   |   Update On 2018-11-01 04:54:00 IST
சர்தார் படேல் உதவியால் அமைக்கப்பட்ட இந்திய நிறுவனங்களை மத்திய அரசு திட்டமிட்டு அழிப்பது தேசத்துரோகம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RagulGandhi #NarendraModi
புதுடெல்லி:

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலை அமைத்து, அதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், “சர்தார் படேல் உதவியால் அமைக்கப்பட்ட இந்திய நிறுவனங்களை மத்திய அரசு திட்டமிட்டு அழிப்பது தேசத்துரோகம்”என சாடி உள்ளார்.



இன்னொரு பதிவில் அவர், “சர்தார் படேல் தேச பக்தி மிகுந்தவர். அவர் நாட்டின் சுதந்திரத்துக்காக, ஒற்றுமைக்காக, மதச்சார்பின்மைக்காக போராடினார். அவரது பிறந்த நாளில், இந்தியாவின் அந்த மாபெரும் மகனுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்” என கூறி உள்ளார். #RagulGandhi #NarendraModi 
Tags:    

Similar News