செய்திகள்

திருப்பதியில் ஆர்ஜித சேவா டிக்கெட் முறைகேடு - 2 பேரிடம் விசாரணை

Published On 2018-10-30 08:21 GMT   |   Update On 2018-10-30 08:21 GMT
திருப்பதியில் முறைகேடாக ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்று தரிசனத்துக்கு வந்த 2 பக்தர்களிடம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupati #ArjithaSeva
திருமலை:

திருப்பதி ஏழுமலையானை நேற்று காலை சுப்ரபாத சேவையில் தரிசிக்க 2 பக்தர்கள் வந்தனர். அவர்களிடம் உள்ள டிக்கெட்டை ஸ்கேன் செய்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த பக்தர்களின் ஆதார் அட்டையை பெற்றுக் கொண்டு, அவர்களை தனியே அழைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த ராஜூ என்ற இடைத்தரகர் மூலம் சுப்ரபாத டிக்கெட்டை ரூ.2000 அளித்து வாங்கியது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது இணையதளம் வாயிலாக தேவஸ்தானம் வெளியிடும் டிக்கெட்டுகளை இடைத்தரகர்கள் பல்வேறு பெயர்களில் பெற்று அதிக விலைக்கு பக்தர்களுக்கு விற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக அந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் பலரை தேவஸ்தான கண்காணிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  #Tirupati #ArjithaSeva
 
Tags:    

Similar News