செய்திகள்

சத்தீஸ்கரில் கோர விபத்து- நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பிய 10 பேர் பலி

Published On 2018-10-14 07:30 GMT   |   Update On 2018-10-14 07:30 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பிய 10 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். #ChhattisgarhAccident
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் ராஜநந்த்கான் மாவட்டம், டோங்கர்கர் நகரில் உள்ள புகழ்பெற்ற பம்லேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் துர்க் மாவட்டம் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொகுசு காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

ராஜநந்த்கான்-துர்க் சாலையில் சோம்னி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது.

காருக்குள் இருந்த 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர். #ChhattisgarhAccident
Tags:    

Similar News