செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்பில் மேல்முறையீடு இல்லை - திருவிதாங்கூர் தேவஸ்தானம் திட்டவட்டம்

Published On 2018-10-07 12:53 GMT   |   Update On 2018-10-07 12:53 GMT
சபரிமலை கோயிலில் வழிபாடு செய்ய அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட 50 முக்கிய கோயில்களை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம் (தேவஸ்தானம்) சார்பிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சுமார் 500 பெண் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், கேரள காவல்துறையில் பணியாற்றும் 40 பெண் போலீசார் இந்த ஆண்டு சபரிமலை யாத்திரையில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #TDBreviewpetition #entryofwomen #LordAyyappatemple #Sabarimala #SabrimalaVerdict
Tags:    

Similar News