செய்திகள்

சர்ஜிகல் ஸ்டிரைக் 2-ம் ஆண்டு தினம் - கோனார்க் போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மரியாதை

Published On 2018-09-28 10:12 IST   |   Update On 2018-09-28 10:12:00 IST
இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தியதன் 2-வது ஆண்டு தினத்தை ஒட்டி ராஜஸ்தான் மாநிலம் கோனார்க்கில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். #SurgicalStrike #PMModi
ஜெய்ப்பூர்:

2016 ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம், அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அளித்தது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், நாளை இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதின் இரண்டாவது ஆண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வருகை தந்துள்ள பிரதமர் மோடி, அங்குள்ள கோனார்க் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும், அங்குள்ள ராணுவ பள்ளியில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் மோடி ஏற்றுக்கொண்டார். 
Tags:    

Similar News