செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் நாயகனுக்கு இறுதி மரியாதை

Published On 2018-09-25 08:35 GMT   |   Update On 2018-09-25 08:35 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில், பலியான ராணுவ வீரரும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் நாயகனுமான சந்தீப் சிங்குக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. #JammuAndKashmir #LanceNaikSandeepSingh #KupwaraEncounter #SurgicalStrike
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் கடந்த 2016 செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில், அதே மாதம் 29-ம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், அங்கு இருந்த பயங்கரவாதிகள் முகாமை தாக்கி அழித்தது.

இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலில் பங்கு பெற்ற வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. எவ்வித சேதமும் இன்றி, எதிர் நாட்டுக்குள் நுழைந்த வீரர்களுக்கு புகழ்மாலை சூட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த பயங்கரவாதிகளுடனான மோதலில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆபரேஷனில் பங்கு பெற்ற வீரரான லான்ஸ் நாயக் சந்தீப் சிங் வீர மரணம் அடைந்தார். இவர் மரணிப்பதற்கு முன்பாக 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.



இன்று இவரது உடலுக்கு ராணுவத்தினரின் இறுதி மரியாதை செய்யப்பட்டது. குஜராத் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் 5 வயது மகன் உள்ளனர். #JammuAndKashmir #LanceNaikSandeepSingh #KupwaraEncounter #SurgicalStrike
Tags:    

Similar News