செய்திகள்

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

Published On 2018-09-23 11:08 GMT   |   Update On 2018-09-23 11:08 GMT
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். #Punjab #LocalBodyElection #Congress
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 22 ஜில்லா பரிஷத்களில் மொத்தமுள்ள 353 மண்டலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 331 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் 18 இடங்களிலும், பாஜக மற்றும் பிற கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

இதேபோல், 150 பஞ்சாயத்து சமிதிகளில் மொத்தமுள்ள 2899 மண்டலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு 2351 இடங்களில் காங்கிரசும், சிரோன்மனி அகாலி தளம் 353 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தகவல்களை மாவட்ட தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கூறுகையில், எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இந்த வெற்றி போய்ச்சேரும். விவசாயிகள் கடன் தள்ளுபடி, போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கை என அனைத்து விஷயங்களிலும் மக்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர் என்பதேயே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார். #Punjab #LocalBodyElection #Congress
Tags:    

Similar News