செய்திகள்

பசு நாட்டின் தாய் - உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2018-09-20 08:05 GMT   |   Update On 2018-09-20 08:05 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், பசுவை நாட்டின் தாயாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Uttarakhand #RashtraMata
டேராடூன்:

இந்தியாவில் மாடுகளை பாதுகாக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பசுக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பசு பாதுகாவலகள் என்ற பெயரில் சிலர் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் பசுக்களை பாதுக்காக்க பல்வேறு மையங்கள் மற்றும் அமைப்புகள் நிருவப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஒருபடி மேலே சென்று, பசுவை நாட்டின் தாய் என அறிவித்து புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதுதொடர்பாக பேசிய உத்தரகாண்ட் மாநில கால்நடை பராமரிப்பு மந்திரி ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். #Uttarakhand #RashtraMata
Tags:    

Similar News