செய்திகள்

சட்டவிரோதமான காப்பகத்தில் இருந்து 19 சிறுவர்களை மீட்ட ஜம்மு காஷ்மீர் போலீசார்

Published On 2018-09-08 11:03 GMT   |   Update On 2018-09-08 11:03 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் அரசு அனுமதி இன்றி இயங்கி வந்த சட்டவிரோதமான காப்பகத்தில் இருந்து 19 குழந்தைகளை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். #JammuKashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஆண்டனி தாமஸ் சிறுவர்கள் காப்பகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 19 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தில் 21 குழந்தைகள் இருந்துவந்ததாகவும், அதில் 2 பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

8 சிறுமிகள் உட்பட 19 பேரை மீட்ட போலீசார், அந்த காப்பகத்தின் உரிமையாளரான ஆண்டனி தாமஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த காப்பகம் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் தாமஸ் போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை.

இந்நிலையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஆண்டனி தாமஸ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #JammuKashmir
Tags:    

Similar News