செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Published On 2018-08-25 08:22 IST   |   Update On 2018-08-25 08:22:00 IST
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பான வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். #Kudankulamnuclearpowerplant
புதுடெல்லி:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பாக பூவலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜி.சுந்தரராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அணு கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி எழுத்து வடிவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  #Kudankulamnuclearpowerplant
Tags:    

Similar News