செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்டர்- 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2018-08-24 12:52 IST   |   Update On 2018-08-24 12:52:00 IST
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #AnantnagEncounter
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாத் பகுதியில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் கோகர்நாத் பகுதியில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

அப்போது கடோல் எனும் கிராமத்துக்குள் 3 தீவிரவாதிகளும் தஞ்சம் அடைந்து இருக்கும் தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் அந்த கிராமத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து இனி தப்பிச்செல்ல இயலாது என்பதை உணர்ந்த தீவிரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட தொடங்கினார்கள். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் 3 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அனந்த்நாக் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாவட்டம் முழுவதும் செல்போன் தகவல் தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது. #AnantnagEncounter
Tags:    

Similar News