செய்திகள்

ரூ.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது

Published On 2018-08-15 23:23 GMT   |   Update On 2018-08-15 23:23 GMT
மருந்து கம்பெனி நடத்தி ரூ.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்த குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் துபாயில் கைது செய்யப்பட்டார். #GujaratPharma #BankFraud
புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார்.

இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். #GujaratPharma #BankFraud #tamilnews 
Tags:    

Similar News