செய்திகள்

உமர் காலித் மீதான தாக்குதல் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - மெகபூபா முப்தி கண்டனம்

Published On 2018-08-13 19:04 GMT   |   Update On 2018-08-13 19:04 GMT
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் மீதான தாக்குதல் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாக உள்ளது என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். #UmarKhalid #JNU #MehboobaMufti
ஸ்ரீநகர்:

டெல்லி அரசியல் சாசன சபையில் ‘வெறுப்புணர்வுகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கோரக்பூர் முன்னாள் டாக்டர் கபீல் கான், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான உமர் காலித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதற்கிடையே, உமர் காலித்தை குறிவைத்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜே.என்.பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் மீதான தாக்குதல் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாக உள்ளது என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்கு முந்தைய நாளில் உமர் காலித் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.  #UmarKhalid #JNU #MehboobaMufti
Tags:    

Similar News