செய்திகள்

ஐதராபாத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 2 பேர் கைது

Published On 2018-08-12 20:43 GMT   |   Update On 2018-08-12 20:43 GMT
ஐதராபாத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். #NIA #Arrest
ஐதராபாத்:

இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளை கடந்த 2016-ம் ஆண்டு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் இருவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 3-வது நபரான அட்னான் ஹசன் என்பவருக்கு எதிரான விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த பயங்கரவாதியிடம் விசாரணை நடத்திய போது, ஐதராபாத்தை சேர்ந்த அப்துல்லா பாசித் (வயது 24), அப்துல் காதிர் (19) ஆகிய இருவர் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அதன் மூலம் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான செயல்களில் அவர்கள் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்துல்லா பாசித் மற்றும் அப்துல் காதிர் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத்தில் கைது செய்தனர். முன்னதாக ஐதராபாத்தின் பல பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், பல்வேறு சட்ட விரோத பொருட்களை அங்கிருந்து கைப்பற்றினர்.  #NIA #Arrest #Tamilnews 
Tags:    

Similar News