செய்திகள்

மத்திய மந்திரியின் சவாலுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சல்மான் கான்

Published On 2018-08-12 13:52 IST   |   Update On 2018-08-12 13:52:00 IST
மத்திய மந்திரி ராஜ்யவர்தன் ரதோரின் ஆன்லைன் சவாலுக்கு வீடியோ மூலம் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். #SalmanKhan #FitnessChallenge
புதுடெல்லி:

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் ரதோர் கடந்த மே மாதத்தில் ட்விட்டரில் ஒரு சவால் ஒன்றை பதிவிட்டார். அதில் உடல் ஆரோக்கியமாக பராமரிப்பது வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த சவால் விடுக்கப்பட்டது. அதில் நாம் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்தியாவும் ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சவாலை பிரதமர் மோடி உட்பட பலரும் ஏற்று தங்கள் உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், மத்திய மந்திரி கிரென் ரிஜிஜு இந்த சவாலை பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்ற சல்மான் கான், தனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனுடன் நாம் ஆரோக்கியமாக இருந்தால் நாடும் ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். #SalmanKhan #FitnessChallenge
Tags:    

Similar News