செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் - இருவர் கைது

Published On 2018-08-10 11:18 GMT   |   Update On 2018-08-10 11:18 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் 6.3 கிலோ வெளிநாட்டு தங்கம் கடத்திவந்த இருவரை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். #foreignorigingoldbars #goldbars
கொல்கத்தா:

விற்பனை வரி, இறக்குமதி வரி மற்றும் சுங்கவரிகளை தவிர்ப்பதற்காக மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மியான்மர் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரும் தொழில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இருவர் மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி மாவட்டம் வழியாக வெளிநாட்டுக்கு தங்கம் கடத்தி செல்வதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் வந்தது.

இதன் அடிப்படையில் சோதனை நடத்திய அதிகாரிகள் 6 கிலோ 300 கிராம் எடையுள்ள வெளிநாட்டு தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  #foreignorigingoldbars #goldbars #Rs1.93Croresgold 
Tags:    

Similar News