செய்திகள்

அசாம் குடியுரிமை பிரச்சனை- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை

Published On 2018-08-04 08:25 GMT   |   Update On 2018-08-04 08:25 GMT
அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக டெல்லியில் இன்று தொடங்கிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. #Congress #RahulGandhi
புதுடெல்லி:

டெல்லியில் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் இன்று காலை நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், அசோக்கெலாட் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


அசாம் மாநிலத்தில் சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இவர்கள் நீண்டகாலமாக அசாமில் குடியிருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அசாம் மாநிலத்தவர்கள் தான். வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என காங்கிரஸ் கூறிவருகிறது. இந்தப் பிரச்சனை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ராஜஸ்தன், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. #Congress #RahulGandhi #SoniaGandhi
Tags:    

Similar News