செய்திகள்

ஐதராபாத் வந்த விமானத்தில் திடீர் தீ - 150 பயணிகள் காயமின்றி தப்பினர்

Published On 2018-08-02 13:55 IST   |   Update On 2018-08-02 13:55:00 IST
குவைத்திலிருந்து இன்று ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் திடீரென தீப்பிடித்தது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினர். #JazeeraAirways #HyderabadAirport #AircraftCatchesFire
ஐதராபாத்:

குவைத்திலிருந்து நேற்று இரவு ஐதராபாத் நோக்கி ஜசீரா விமானம் (ஜே9 608) புறப்பட்டு வந்தது. அதில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் இன்று அதிகாலை 1.33 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.



விமான நிலையத்தில் தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. தீப்பிடித்ததை கவனித்த விமான ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். என்ஜினும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். குறித்த நேரத்திற்குள் தீயை கட்டுப்படுத்தியதால், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #JazeeraAirways #HyderabadAirport #AircraftCatchesFire





Tags:    

Similar News